search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இது நம்முடைய கடமை: முதல் முறையாக வாக்களித்த மனு பாக்கர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இது நம்முடைய கடமை: முதல் முறையாக வாக்களித்த மனு பாக்கர்

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவர் மனு பாக்கர்.
    • அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போதுதான் முதல் முறையாக வாக்களித்துள்ளார்.

    பாரீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இரண்டு பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அவர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். அரியாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்றும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் மனு பாக்கர் தனது தந்தையுடன் வாக்குமையம் வந்து வாக்கு செலுத்தினார்.

    வாக்கு செலுத்தியபின் அவர் கூறியதாவது:-

    நாட்டில் உள்ள இளைஞர்கள், அவர்களுக்கு பிடித்தமான வேட்பாளர்களுக்கு வாக்கு அளிப்பது நம்முடைய கடமை ஆகும். மிகப்பெரிய இலக்கிற்கான சிறிய முயற்சி. நான் முதன்முறையாக வாக்கு செலுத்தியுள்ளேன்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    அவரது தந்தை ராம் கிஷண் பாக்கர் கூறுகையில் "நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு செலுத்துகிறோம். நாம் வாக்கு செலுத்தவில்லை என்றால் நம்முடைய கிராமம் எப்படி வளர்ச்சி பெறும். எல்லோரும் வாக்கு மையம் வந்து வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

    இளைஞர்கள் அதிக அளவில் திரண்டு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறத்தும் வகையில் மனு பாக்கர் தூதராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×