search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சடலத்துடன் உடலுறவு கொள்வது சட்டப்படி பலாத்காரம் ஆகாது - உயர்நீதிமன்றம் வினோத தீர்ப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சடலத்துடன் உடலுறவு கொள்வது சட்டப்படி பலாத்காரம் ஆகாது - உயர்நீதிமன்றம் வினோத தீர்ப்பு

    • சிறுமியின் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டில் புகுந்து அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • குழி வெட்டி சிறுமியின் சடலத்தை கிடத்திய பின்னர் இறந்த உடலுடன் நண்பன் நீல்காந்த் பாலியல் உறவு வைத்துள்ளான்.

    இறந்தவரின் உடலுடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகாது என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சடலத்துடன் உடலுறவு கொள்ளும் தன்மைக்கு நெக்ரோபிலியா என்பது அறிவியல் பெயர்.

    கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்து மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் காணாமல் போனதாக காவல் நிலையத்துக்கு வந்த புகாரை அடுத்து நடந்த தேடுதலில் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்துடனும் உடலுறவு வைத்துக்கொள்ளப்பட்டது தெரியவந்தது.

    சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த நீல்சந்த். சிறுமியின் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டில் புகுந்து அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    சிறுமி கத்த முயன்றதால் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு தனது நண்பன் நீல்காந்த் உதவியுடன் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உடலை புதைத்துள்ளான். குழி வெட்டி சிறுமியின் சடலத்தை கிடத்திய பின்னர் இறந்த உடலுடன் நண்பன் நீல்காந்த் பாலியல் உறவு வைத்துள்ளான். விசாரணையின்போது இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவந்துள்ளன.

    இந்நிலையில் இதுதொடர்பாக சத்தீஸ்கர் நீதிமன்றம் நீலச்சந்த்க்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோதிலும் சடலத்துடன் உடலுறவு வைத்த நண்பன் நீல்காந்த் -ஐ போக்ஸோ குற்றத்தில் இருந்து விடுவித்தது.

    இதை எதிர்த்து கொல்லப்பட்ட சிறுமியின் தாய் சார்பில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நெக்ரோபிலியா என்பது அரசியலமைப்பின் 21வது பிரிவை மீறுவதாகவும், இது கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது என்றும், மரணத்திற்குப் பிறகு ஒருவரின் உடல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதற்கும் உரிமை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    தொடர்ந்து பேசிய நீதிபதிகள், உயிருள்ள மனிதனுக்கு மட்டுமல்ல... இறந்த உடலுக்கும் கண்ணியமும் நியாயமாக அணுகுமுறை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

    ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ சட்டம்) பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருக்கும்போது மட்டுமே பொருந்தும் என்று கூறி மனுவை நிராகரித்தனர்.

    Next Story
    ×