search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தலித் என்பதால் போலீஸ் கஸ்டடியில் கொலை செய்யப்பட்டார்.. மகாராஷ்ராவில் ராகுல் காந்தி காட்டம்
    X

    தலித் என்பதால் போலீஸ் கஸ்டடியில் கொலை செய்யப்பட்டார்.. மகாராஷ்ராவில் ராகுல் காந்தி காட்டம்

    • நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி சட்டக்கல்லூரியில் படித்து வந்தார்
    • இது ஒரு 100 சதவீத லாக் அப் மரணம். காவல்துறை அவரை கொன்றுவிட்டது.

    மகாராஷ்டிர மாநிலம் பர்பானி [Parbhani] நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரெயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பு பிரதியை எரிதத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

    பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதாக [vandalism] 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 35 வயதான பகுஜன் அகாடி (VBA) தலித் செயல்பாட்டாளர் சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷி என்பவர் டிசம்பர் 15 காலையில் அவர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார்.

    நெஞ்சுவலி காரணமாக சூர்யவன்ஷி உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது. ஆனால் போராட்டத்தின்பின் பின் வீடியோ பதிவுடன் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் சூர்யவன்ஷியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்த காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்துள்ளது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். எனவே போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதியானது.

    நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, படிப்பு செலவுக்காக சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர். இவரது சகோதரரும் தாயும் புனேவில் உள்ள சாக்கனில் கூலி வேலை செய்து வந்தனர்.

    பகுஜன் அகாடி கட்சியுடன் இணைந்து உள்ளூர் செயல்பாட்டாளராக சூர்யவன்ஷி இருந்துள்ளார்.

    சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர். அவரது உடலை பர்பானிக்கு கொண்டு வர போலீஸ் அனுமதிக்கவில்லை. ஆனால் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்பால் போலீஸ் பின்வாங்கியது.

    காவல்துறை வேண்டுமென்றே தலித் குடிசைகளுக்குள் நுழைந்து சொத்துக்களை அழிப்பதை உள்ளூர் வாசிகளால் பதிவுசெய்யப்பட்ட பல வீடியோக்கள் காட்டுகிறது.

    பர்பானிக்கு மாவட்டத்தில் தலித்-பகுஜன் அம்பேத்கரிய இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவை சூர்யவன்ஷியின் மரணம் எடுத்துக்காட்டுவதாகவும் இந்த விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றிலும் தோற்றுப் போயுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    இன்னும் பர்பானியில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, போலீஸ் சித்திரவதையில் உயிரிழந்த சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷியின் குடும்பத்தினரை நேற்று [திங்கள்கிழமை] நேரில் சென்று சந்தித்துள்ளார்.

    மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்த பின் பேசிய ராகுல் காந்தி, தலித் என்ற காரணத்திற்காகவும், அரசியல் சாசனத்தைக் காத்ததற்காகவும் இளைஞன் கொல்லப்பட்டான்.இது ஒரு 100 சதவீத லாக் அப் மரணம். காவல்துறை அவரை கொன்றுவிட்டது.

    காவல்துறையை பாதுகாக்க சட்டசபையில் முதல்வர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அரசியல் சாசனத்தை துடைத்தெறிவதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் நோக்கம் துடைத்து என்று ராகுல் தெரிவித்தார்.

    இதற்கிடையே புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தி அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இங்கு வந்தார். மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதே அவரது வேலை. கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×