என் மலர்
இந்தியா
X
கேரளாவில் கனமழை- 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
Byமாலை மலர்3 July 2022 5:07 PM IST
- ஜூலை 7-ஆம் தேதி வரை 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும், மேலும் ஒன்பது மாவட்டங்களில் செவ்வாய்கிழமையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் என்பது அடுத்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும்.
கேரளா-லட்சத்தீவு-கர்நாடகா கடற்கரை பகுதிகளில் ஜூலை 7-ஆம் தேதி வரை 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
X