search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கணவனின் வீட்டில் மனைவியின் தோழியை தங்கவைப்பது கொடுமை - விவாகரத்து வழங்கிய உயர்நீதிமன்றம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கணவனின் வீட்டில் மனைவியின் தோழியை தங்கவைப்பது கொடுமை - விவாகரத்து வழங்கிய உயர்நீதிமன்றம்

    • கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • இதை எதிர்த்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்

    கணவனின் வீட்டில் அவரது விருப்பத்திற்கு மாறாக மனைவி தனது தோழி மற்றும் குடும்பத்தினரை தங்க வைப்பது மன ரீதியான கொடுமை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த தீரஜ் குயின்ம் தனுஸ்ரீ மஜூம்தார் ஆகிய இருவருக்கும் 2005 ஆம் ஆண்டு திருமணமாகி உள்ளது.

    தீரஜ் குயின் வேலை செய்து வந்த பணியிடத்தில் அவருக்கு கோலாகாட் பகுதியில் கோட்டரஸ் வீடு வழங்கப்பட்டுள்ளது. தனது மனைவியுடன் அவர் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

    ஆனால் மனைவி தனது தோழி மௌசுமி பால் என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் தங்கள் வீட்டிலேயே வீட்டில் தங்க வைத்துள்ளார். கணவனுக்கு இது பிடிக்காத போதிலும் மனைவிக்காக சகித்துக்கொண்டு அவர்களுடன் தனது வீட்டில் வாழ்ந்துள்ளார். இது இப்படியிருக்க தாம்பத்தியத்திற்கோ, கணவனுடன் நேரம் செலவிடவோ மனைவி விரும்பவில்லை. பல நாள் தொடர்ச்சியாக அவர் வீடு தங்குவதில்லை.

    அந்த சமயங்களிலும் மனைவியின் தோழி மற்றும் அவரது குடும்பத்துடன் சகித்துக்கொண்டே கணவர் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மனம் நொந்த அவர் கடைசியாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். இதை எதிர்பாராத மனைவி, கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துபவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

    எனவே கணவர் தாக்கல் செய்த விவாகரத்து மனு விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வரதட்சணை கொடுமை வழக்கில் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    அந்த மனு இன்று நீதிபதிகள் சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் உதய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தனது மனைவி, அவரது தோழி, அவரது குடும்பத்தினர் என தனக்கு நேர்ந்த கொடுமைகளை அடுக்கியுள்ளார்.

    கணவரின் சம்மதம் இல்லாமல் அவரது வீட்டில் மூன்றாவது நபரை மனைவி தங்க வைத்தது மன ரீதியான கொடுமை. மேலும் குழந்தை பெற்றுக்கொள்வதிலோ தாம்பத்தியத்திலோ குறைந்தது கணவனுடன் நேரம் செலவிடவோ மனைவிக்கு ஈடுபாடு இல்லை என தெரிகிறது.

    இதுவும் கொடுமையாகவே பாவிக்கட்டும் என கூறி கணவனுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டனர். மேலும் கணவன் விவாகரத்து கோரிய பிறகே மனைவி வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளதால் அது போலியானது என யூகிக்க முடிவதாக கூறி விசாரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தனர்.

    Next Story
    ×