என் மலர்
இந்தியா

X
மாநில மொழிகளுக்கு இந்தி போட்டி அல்ல- மத்திய அமைச்சர் அமித்ஷா
By
மாலை மலர்4 Aug 2023 7:24 PM IST

- அலுவல் மொழிக்கான 38வது பாராளுமன்ற குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு.
- நல்லிணக்கம் உந்து சக்தி மற்றும் முயற்சியின் மூலமாக வர வேண்டும்.
டெல்லியில், அலுவல் மொழிக்கான 38வது பாராளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்கப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாடு வலியை பெறும்.
எந்தவிதமான எதிர்ப்புமின்றி அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை உருவாக்க வேண்டும்.
அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது என்பது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது.
நல்லிணக்கம் உந்து சக்தி மற்றும் முயற்சியின் மூலமாக வர வேண்டும்.
பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளை 10 மொழிகளில் தொடங்குவதற்கான முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
விரைவில் இந்த பாடத்திட்டங்கள் அனைத்து இந்திய மொழிகளிலும் கிடைக்க பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X