என் மலர்
இந்தியா
பிச்சைக்காரருடன் ஓடிவிட்டதாக புகார் கொடுத்த கணவன்.. திரும்பி வந்து மனைவி வைத்த ட்விஸ்ட்
- மகள் குஷ்புவிடம் துணி மற்றும் காய்கறிகள் வாங்க சந்தைக்கு செல்வதாக கூறியதாகவும் கூறியுள்ளார்
- வழக்கு பற்றி அறிந்ததும் ராஜேஸ்வரி காவல் நிலையத்திற்குச் வந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் தனது மனைவி பிச்சைக்காரர் ஒருவருடன் ஓடிவிட்டதாக கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்த்தவர் ஆறு பிள்ளைகளின் தாயான 36 வயது ராஜேஸ்வரி. இவரை ஜனவரி 3 முதல் காணவில்லை.
அவரது கணவர் ராஜு, ஜனவரி 5 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார், மனைவி, 45 வயது பிச்சைக்காரரான நான்ஹே பண்டிட்- உடன் அடிக்கடி தொடர்பு கொண்டார் என்று குற்றம் சாட்டினார். எருமை மாட்டை விற்று தான் சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு மனைவி அந்த பிச்சைக்காரருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கணவர் தெரிவித்துள்ளார்.
ராஜேஸ்வரி, மகள் குஷ்புவிடம் துணி மற்றும் காய்கறிகள் வாங்க சந்தைக்கு செல்வதாக கூறியதாகவும், ஆனால் திரும்பி வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து பாரதீய நியாய சந்ஹிதாவின் பிரிவு 87 இன் கீழ் கடத்தல் FIR பதிவு செய்யப்பட்டது.
வழக்கு பற்றி அறிந்ததும் ராஜேஸ்வரி காவல் நிலையத்திற்குச் வந்து வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
தனது கணவர் தன்மீது தினந்தோறும் உடல் ரீதியான வன்முறையில் ஈடுபட்டார் என்றும் சித்ரவதையில் இருந்து தப்பிக்க பரூக்காபாத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். யாருடனும் தான் வெளியேறவில்லை என்றும் நான்ஹே பண்டிட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
ராஜேஸ்வரியின் கணவர் குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை. இந்த வழக்கில் தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.