என் மலர்
இந்தியா
பிரசவத்தில் 3வதும் பெண் குழந்தை.. மனைவியை உயிருடன் எரித்த கணவன்.. துடிதுடித்து தெருவில் ஓடிய அவலம்
- இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
- உயிருடன் எரிந்தபடி அவர் அலறியடித்துக்கொண்டு வீட்டின் வெளியே ஓடினார்.
மகாராஷ்டிராவில் பிரசவத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்ற மனைவியை கணவன் உயிருடன் தீவைத்து எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே[32 வயது]. இவரது மனைவி மைனா [Maina] குண்ட்லிக். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் இல்லாததால் மைனாவை காலே தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான மைனாவுக்கு சமீபத்தில் பிரசவம் நடந்துள்ளது. 3 வது முறையாகவும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் குண்ட்லிக் உத்தம் காலே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடந்த வியாழக்கிழமை இரவு 8:00 மணியளவில் மைனா மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துள்ளார்.
உயிருடன் எரிந்தபடி அவர் அலறியடித்துக்கொண்டு வீட்டின் வெளியே ஓடினார். அக்கம்பக்கத்தினர் தீயை அனைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் [வெள்ளிக்கிழமை] அவர் உயிரிழந்தார். மைனாவின் சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவன் குண்ட்லிக் உத்தம் காலேவை கைது செய்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 103 (கொலை வழக்கு) பதிவு செய்யப்பட்டுள்ளது.