search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு: ஜெர்மனி பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
    X

    பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு: ஜெர்மனி பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

    • சந்தையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
    • ஜெர்மனியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர்.

    இதற்கிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி ஜெர்மனியின் சண்டோனி அன்ஹட் மாகாணம் மக்டக்பெர்க் நகரின் மையப் பகுதியில் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சந்தையில் நேற்று இரவு குவிந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டிருதனர்.

    அப்போது அங்கு வேகமாக வந்த கார் சந்தைக்குள் புகுந்தது. சந்தையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது. இந்த கோர சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 7 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டரை கைதுசெய்தனர்.

    இது பயங்கரவாத தாக்குதல் என ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜெர்மனியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மனி நாட்டின் சண்டோனி அன்ஹட் மாகாணம் மக்டக்பெர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×