search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2024-ல் ரஷியாவில் இருந்து ரூ. 4.47 லட்சம் கோடிக்கு கக்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியா
    X

    2024-ல் ரஷியாவில் இருந்து ரூ. 4.47 லட்சம் கோடிக்கு கக்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியா

    • இந்தியா, சீனா, துருக்கி நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.
    • உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் 3-வது ஆண்டில் மட்டும் இந்தியா 49 பில்லியன் யூரோவிற்கு இறக்குமதி செய்துள்ளது.

    ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுத்தது. பின்னர் இது மிகப்பெரிய போராக வெடித்தது. முதலில் ரஷியா எல்லை அருகில் உள்ள உக்ரைனின் ஏராளமான பகுதிகளை பிடித்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் இருந்து வெளியேறியது. தற்போது டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

    மின் உற்பத்தி நிலையங்கள், ஆயுத கிடங்குகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற கட்டமைப்புகளை குறிவைத்து இரு நாடுகள் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கி 3-வது வருடம் முடிவடைந்து, 4-வது வருடமாக நீடித்து வருகிறது. 4-வது வருடம் தொடங்குவதையொட்டி உக்ரைன் மீது ரஷியா 250-க்கும் அதிகமான டிரோன்கள் மூலும் தாக்குதல் நடத்தியது.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தன. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது எனத் தெரிவித்தன.

    ஐரோப்பிய நாடுகள் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. ஆனால் இந்தியா, சீனா, துருக்கி நாடுகள் அமெரிக்காவின் மிரட்டலை நிராகரித்து ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்தனர். இதற்கு முக்கிய காரணம் மிகவும் மலிவாக விலையில் ரஷியா கச்சா எண்ணெய் வழங்கியதுதான்.

    இதனால் இந்தியாவின் மொத்த கச்சாய் எண்ணெய் இறக்குமதி ரஷியாவில் இருந்து 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வந்த நிலையில் 40 சதவீதம் வரைக்கு அதிகரித்துள்ளது.

    உக்ரைன்- ரஷியா இடையே போர் நடைபெற்று வரும் 3-வது வருடத்தில் (2024) இந்தியா 49 பில்லியன் யூரோ அளவிற்கு ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

    சீனா 78 பில்லியன் யூரோ அளவிற்கும், துருக்கி 34 பில்லியன் அளவிற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

    இந்தியா மற்றும் துருக்கியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக ஜி7 அமைப்பில் உள்ள நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளன. இந்தியா மற்றும் துருக்கியில் இருந்து 18 பில்லியன் யூரோ அளவிற்கு பெட்ரோல், டீசல் போன்றவற்றை இறக்குமதி செய்துள்ளன.

    Next Story
    ×