என் மலர்
இந்தியா

3 இந்தியர்கள் மாயம்: ஈரான் உதவியை நாடிய வெளியுறவுத்துறை
- ஈரானில் 3 இந்தியர்கள் மாயமாகி உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இதுபற்றி ஈரான் அரசு, டெல்லியில் இருக்கும் ஈரான் தூதரகத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
ஈரான் நாட்டில் இந்தியர்கள் 3 பேர் மாயமாகி உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் அரசிடமும், டெல்லியில் இருக்கும் ஈரான் தூதரகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை சார்பில் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரான் நாட்டில் இந்தியர்கள் 3 பேர் காணாமல் போயுள்ளனர். இதுதொடர்பாக அந்நாட்டு அரசிடம் மத்திய அரசு தகவல் தெரிவித்து கடும் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது.
டெல்லியில் இருக்கும் ஈரான் தூதரகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இருக்கும் இந்திய தூரகம், ஈரான் அரசுடன் தொடர்பில் உள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டறிய உதவும்படி கோரிக்கை விடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story