என் மலர்
இந்தியா
குடியரசு தினத்தை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்தியா - வங்காளதேச ராணுவத்தினர்
- 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது
- சஷாஸ்திர சீமா பால் (SSB) வீரர்கள், நேபாள காவல்துறையினருடன் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர்.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுக்க கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார்.
அதன்பின் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா-வங்கதேச எல்லையில் இருநாட்டு ராணுவங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் உள்ள ஃபுல்பாரி இந்தோ-வங்கதேச எல்லையில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்), வங்கதேச எல்லைக் காவலர்களுக்கு (பிஜிபி) இனிப்புகள் கொடுத்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல, இந்திய-நேபாள எல்லை, டார்ஜிலிங்கில் உள்ள பானிடாங்கி பகுதியில், சாஷாஸ்திர சீமா பால் (SSB) மத்திய காவல்படை வீரர்கள், நேபாள காவல்துறையினருடன் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர்.