என் மலர்
இந்தியா
VIDEO: மகா கும்பமேளாவில் புனித நீராடிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
- 45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [ திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புனித நீராடுவதற்காக பொது மக்களும் முக்கிய பிரமுகர்களும் மகாகும்பத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சசிங் மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளார்.
புனித திரிவேணியில் அவர் இன்று [சனிக்கிழமை] நீராடினார். இன்று மதியம் 12 மணிக்கு பிரயாக்ராஜை அவர் வந்தடைந்தார். இரண்டு நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
राजनाथ सिंह ने आज संगम में डुबकी लगाई#kumbhmela @rajnathsingh #kumbhmela2025prayagraj pic.twitter.com/Rv3j8BmDqb
— Bharat Raftar TV (@BharatRaftarTV) January 18, 2025
இதுவரை, 2025 மகாகும்பத்தில் 7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விடுத்த அழைப்பின்படி பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 8 அல்லது 9 ஆம் தேதி கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.