என் மலர்
இந்தியா
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: உமர் அப்துல்லா உள்பட 32 வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
- முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் 90 இடங்களுக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. 5 இடங்களில் தனித்தனியாக களமிறங்குகின்றன.
இதற்கிடையே, முதல் கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், தேசிய மாநாடு கட்சி சார்பில் 32 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டது. இதில் உமர் அப்துல்லா கண்டர்பால் தொகுதியிலும், தன்வீர் சாதிக் ஜடிபால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.