search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    80 மாணவிகள் சட்டைகளை அவிழ்த்து.. அப்படியே வீட்டுக்கு அனுப்பிய பள்ளித் தலைமை ஆசிரியர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    80 மாணவிகள் சட்டைகளை அவிழ்த்து.. அப்படியே வீட்டுக்கு அனுப்பிய பள்ளித் தலைமை ஆசிரியர்

    • மாணவிகள் சிலர், தங்களது தோழிகளின் சட்டைகளில் பெயர் மற்றும் சில வாசகங்களை எழுதினர்.
    • ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் திக்வாடியில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளும் நிறைவு பெற்ற தினத்தில் மகிழ்ச்சியில் வெளியே வந்த மாணவிகள் சிலர், தங்களது தோழிகளின் சட்டைகளில் பெயர் மற்றும் சில வாசகங்களை எழுதினர்.

    இதைப்பார்த்த அந்த பள்ளியின் முதல்வர், அவர்களை அழைத்து கண்டித்தார். அத்துடன் அவர் மாணவிகளுக்கு கொடுத்த தண்டனைதான் கொடூரமானது. அதாவது சட்டையில் மாணவிகள் எழுதியதால், அவர்களின் சட்டைகளை களைந்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு கூறினார்.

    இப்படி சுமார் 80 மாணவிகள் தங்களது மேல் சட்டைகள் இன்றி தங்களது வீடுகளுக்கு சென்றனர். மேல் சட்டை இல்லாமல் பிளேசர் மட்டுமே அவர்கள் அணிந்தவாறு அவர்கள் சென்றுள்ளனர்.

    இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது, சம்பந்தப்பட்ட முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.

    ஆனாலும் பெற்றோர்கள் சமாதானம் அடையவில்லை. முதல்வர் மீது ஜோராபோகர் போலீசில் புகார் செய்தனர்.

    இதுபற்றி தன்பாத் மாவட்ட கலெக்டர் மாதவி மிஸ்ரா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் துணைப்பிரிவு நீதிபதி, மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நல அதிகாரி மற்றும் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி ஆகியோர் உள்ளனர். விசாரணை குழுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜாரியா தொகுதி எம்.எல்.ஏ. ராகினி சிங், இது வெட்கக்கேடான சம்பவம் என்றார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×