search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீதிபதிகள் சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது.. துறவி போல் வாழ வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை
    X

    நீதிபதிகள் சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது.. துறவி போல் வாழ வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை

    • பி.வி. நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • நீதித்துறை அதிகாரிகள் இவ்வளவு தியாகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

    நீதிபதிகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், தீர்ப்புகள் குறித்த கருத்துக்களை பொதுவெளியில் வெளியிடுவதைத் தவிர்க்கவும் உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

    அவர்கள் ஒரு துறவியைப் போல வாழ வேண்டும், குதிரையைப் போல வேலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில், வேலை திருப்தி அளிக்கவில்லை என கூறி இரண்டு பெண் நீதித்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் பேஸ்புக்கிற்கு செல்லக்கூடாது, தீர்ப்புகள் குறித்து வெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது, ஏனென்றால் நாளை தீர்ப்பு வழங்கப்பட்டால், நீதிபதி ஏற்கனவே அந்த தீர்ப்பை மறைமுகமாக கூறிவிட்டார் என்றாகிவிடும்.

    சமூக ஊடகம் ஒரு திறந்த தளம். நீங்கள் ஒரு துறவி போல வாழ வேண்டும், குதிரையைப் போல வேலை செய்ய வேண்டும். நீதித்துறை அதிகாரிகள் இவ்வளவு தியாகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

    Next Story
    ×