search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சாரம், குடிநீர் -  கெஜ்ரிவால் அள்ளி வீசிய அறிவிப்புகள்
    X

    வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சாரம், குடிநீர் - கெஜ்ரிவால் அள்ளி வீசிய அறிவிப்புகள்

    • பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
    • டெல்லியில் வாடகை வீட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் பூர்வாஞ்சலைச் சேர்ந்தவர்கள்.

    டெல்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    மூன்று கட்சிகளும் ஏராளமான இலவச அறிவுப்புகளை அள்ளி வீசியுள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

    பாஜகவும் இலவசங்களை வழங்கி வருவதால் இதற்கு முன்னர் இலவசங்களை குறித்து தவறாக பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.

    இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், டெல்லியில் வசிப்பவர்களுக்கு நாங்கள் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்கியுள்ளோம். ஆனால், வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது.

    நான் எங்கு சென்றாலும், வாடகை வீட்டில் வசிப்பவர்களைச் சந்திக்கிறேன். அவர்கள் நல்ல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளால் பயனடைகிறார்கள். ஆனால் இலவச மின்சாரம், குடிநீர் திட்டங்கள் கிடைக்காமல் பாதிப்பில் உள்ளனர்.

    டெல்லியில் வாடகை வீட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் பூர்வாஞ்சலைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் மிகவும் ஏழ்மையில் உள்ளனர். அவர்கள் அரசு மானியங்களைப் பெற முடியாமல் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

    இதைத் தீர்க்க, அடுத்து எங்கள் அரசு அமைந்தால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

    முன்னதாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதியும், மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% சலுகையும் வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×