என் மலர்
இந்தியா

X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
பஸ் டிக்கெட்டில் கண்டக்டர் படத்தை வரைந்த வாலிபர்
By
மாலை மலர்14 March 2024 10:58 AM IST (Updated: 14 March 2024 12:23 PM IST)

- கண்டக்டரின் உருவப்படத்தை ஆசிக் தனது டிக்கெட்டில் அசத்தலாக வரைந்து கண்டக்டரிடம் கொடுக்கிறார்.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஆசிக்கின் திறமைகளை பாராட்டி பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
கலைஞர்கள் பலரும் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சிறந்த தளமாக சமூக வலைத்தளங்கள் விளங்கி வருகின்றன. அந்த வகையில் ஆசிக்பாண்டிக்காட் என்ற கலைஞரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் பஸ் கண்டக்டரிடம் இருந்து பயண டிக்கெட்டை பெறும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த கண்டக்டரின் உருவப்படத்தை ஆசிக் தனது டிக்கெட்டில் அசத்தலாக வரைந்து கண்டக்டரிடம் கொடுக்கிறார். அதைப்பார்த்த கண்டக்டர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.
வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஆசிக்கின் திறமைகளை பாராட்டி பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Next Story
×
X