என் மலர்
இந்தியா
X
ஓணம் 2024-ஒருவார கொண்டாட்டம் ரத்து: பினராயி விஜயன்
Byமாலை மலர்20 Aug 2024 9:09 PM IST
- வயநாடு பேரழிவால் ஒரு வார ஓணம் கொண்டாட்டத்தை கேரள அரசு ரத்து செய்தது.
- இந்த சமயத்தில் வயநாடு மக்களுக்கு உறுதுணையாக நிற்போம் என்றார்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அங்கு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
நிலச்சரிவில் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் வார கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு பேரழிவால் ஓணம் வார கொண்டாட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இந்த சமயத்தில் வயநாடு மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
Next Story
×
X