என் மலர்
இந்தியா
ரொட்டி வேண்டாம்... முட்டை நூடுல்ஸ்தான் வேண்டும்... சிறையில் அடம்பிடித்த பெண் டாக்டர் கொலையாளி
- கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- சிபிஐ இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயற்சி டாக்டர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செயப்பட்டார். இந்த சம்பவத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு மேற்கு வங்க அரசு உதவுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஒப்பந்த ஊழியரான சஞ்சய் ராய் என்பவர்தான் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சஞ்சய் ராய் இடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் வழக்கமாக ரொட்டி (roti-sabzi) வழங்கப்படும். ஆனால் தனக்கு ரொட்டி வேண்டாம். முட்டை நூடுல்ஸ் (egg chowmein) வேண்டும் என அடம்பிடித்ததாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் இந்த தகவலை தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறை அதிகாரிகள் கண்டிக்கவே, வேறு வழியில்லாமல் ரொட்டி சாப்பிட்ட ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக சிறையில் அனைத்து கைதிகளுக்கும் ரொட்டிதான் வழங்கப்படும். அந்த வகையில் அவருக்கும் வழங்கப்பட்டது. அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தூங்குவதற்கு கூடுதல் நேரம் கேட்டதாகவும், முணுமுணுத்துக் கொண்டே இருந்ததாகவும், சில நாட்களில் சகஜ நிலைக்கு வந்ததாகவும் நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக இரண்டு முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.