search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூரில் பொது போக்குவரத்து தொடக்கம்: குகி போராட்டக்காரர்கள்- பாதுகாப்புப்படையினர் இடையே மோதல்
    X

    மணிப்பூரில் பொது போக்குவரத்து தொடக்கம்: குகி போராட்டக்காரர்கள்- பாதுகாப்புப்படையினர் இடையே மோதல்

    • இன்று முதல் மக்கள் அனைத்து சாலைகளிலும் சுதந்திரமாக செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு.
    • மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து பலத்த பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது.

    மணிப்பூரில் கடந்த 2023-ஆண்டு குகி- மெய்தி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் சொந்த இடங்களில் இருந்து வெளியேறினர். இந்த வன்முறைக்கு சுமார் 250 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த வன்முறை காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு வருகிற 8-ந்தேதி (இன்றுமுதல்) முதல் அனைத்து சாலைகளும் திறக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அனைத்து சாலைகளிலும் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து 8-ந்தேதியான இன்று மணிப்பூர் மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தொடங்கியது.

    சேனாபதி மாவட்டத்திற்குச் செல்லும் பேருந்து கக்போக்பி மாவட்டத்தின் காம்கிபாய் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது குகி போராட்டக்காரர்கள் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாப்புப்படையினர் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியதுடன் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.

    குகி பிரிவினர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தனி நிர்வாகம் வேண்டும். அதுவரை சுதந்திரமான நடமாட்டத்தை விரும்பவில்லை என போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு பேருந்து இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×