search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடந்த ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1,365 கோடி
    X

    கடந்த ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1,365 கோடி

    • கடந்த 3 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • பிரசித்தி பெற்ற விழாக்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முடி காணிக்கையும் செலுத்துகின்றனர். சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர்.

    கடந்த ஆண்டு (2024) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை, முடி காணிக்கை செலுத்தியவர்கள், உண்டியல்காணிக்கை ஆகிய விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி கடந்த ஆண்டு 2 கோடியே 55 லட்சம் பக்தர்கள் சாமிதரிசனம் செய்துள்ளனர். 99 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.

    உண்டியல் காணிக்கையாக ரூ.1,365 கோடி கிடைத்துள்ளது. கொரோனா காலத்துக்கு முன்பு ஒரு நாளைக்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். ஆனால் கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், கடந்த 3 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று 6 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும், 12.14 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற பிரசித்தி பெற்ற விழாக்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அப்போது உண்டியல் மூலம் பெறப்படும் காணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×