என் மலர்
இந்தியா
டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..
- டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - நாம் தமிழர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படவுள்ளன.
Live Updates
- 8 Feb 2025 10:22 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 25,241 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3,977 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- 8 Feb 2025 10:21 AM IST
கல்காஜி தொகுதியில் டெல்லி முதலமைச்சர் அதிஷி முன்னிலை. பா.ஜ.க. வேட்பாளரை விட சுமார் ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- 8 Feb 2025 10:18 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. 42 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
#DelhiElectionResults | BJP surges ahead of AAP as the party leads in 42 seats out of the total 70 seats in Delhi, as per early official trends pic.twitter.com/57SMfInib8
— ANI (@ANI) February 8, 2025 - 8 Feb 2025 10:12 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 24,128 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3,792 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- 8 Feb 2025 9:56 AM IST
புதுடெல்லி சட்டசபை தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை பெற்றுள்ளார். டெல்லி முதலமைச்சர் அதிஷி தொடர்ந்து பின்னடைவு.
- 8 Feb 2025 9:51 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3,025 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- 8 Feb 2025 9:49 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை பெற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி 19,232 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- 8 Feb 2025 9:28 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: ஜாங்க்புரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தர்விந்தர் சிங் முன்னிலை பெற்றுள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் மணீஷ் சிசோடியா பின்னடைவை சந்தித்துள்ளார்.
- 8 Feb 2025 9:28 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல் பாஜக 15 இடங்களிலும், ஆம் ஆத்மி 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது
#WATCH | Counting of votes in Delhi elections is underway Dhirpur
— ANI (@ANI) February 8, 2025
Early official trends in the Delhi elections show BJP leading in 15 seats, AAP leading in 4 seats pic.twitter.com/BqsNmQvAe4