என் மலர்
இந்தியா

X
மகா கும்பமேளா மரண விழாவாக மாறிவிட்டது: மம்தா பானர்ஜி ஆவேசம்
By
மாலை மலர்18 Feb 2025 4:17 PM IST

- மகா கும்பமேளாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை.
- ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றார்.
கொல்கத்தா:
மேற்குவங்க சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மகா கும்பமேளா விழா மரண விழாவாக மாறிவிட்டது.
நான் மகா கும்பமேளாவை மதிக்கிறேன். புனிதமான கங்கா மாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை.
எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்?.
பணக்காரர்கள், வி.ஐ.பி. கூடாரங்கள் ₹1 லட்சம் வரை பெற அமைப்புகள் உள்ளன.
ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை.
ஒரு கும்பமேளாவில் நெரிசல் ஏற்படுவது பொதுவானது. ஆனால் ஏற்பாடுகளைச் செய்வது முக்கியம். என்ன திட்டமிடல் செய்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
Next Story
×
X