search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பட்ஜெட்டை விட முக்கியம்: மகா கும்பமேளாவில் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்கும் அரசு - அகிலேஷ்
    X

    பட்ஜெட்டை விட முக்கியம்: மகா கும்பமேளாவில் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்கும் அரசு - அகிலேஷ்

    • நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொங்கும்முன் அகிலேஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • இந்துக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கடந்த ஜனவரி 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்துகொண்டபோது கூட்டநெரிசல் ஏற்பட்டது.

    இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கூட்டநெரிசலில் உய்ரில்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மறைப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இன்று பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த சூழலில் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிகள் கும்பமேளா கூட்டநெரிசல் உயிரிழப்புகள் குறித்து விவாதிக்க கோரினர்.

    நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொங்கும்முன் அகிலேஷ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளியே செய்தியர்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ், மகா கும்ப கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.

    தற்போது பட்ஜெட்டை விட முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. மகா கும்பமேளாவில் உள்ளவர்கள் இன்னும் தங்கள் உறவினர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

    முதல்வர் பலமுறை அங்கு சென்றுள்ளார், மத்திய உள்துறை அமைச்சர் அங்கு சென்றுள்ளார், இன்று துணை ஜனாதிபதி செல்கிறார், பிரதமரும் அங்கு செல்வார். ஆனால் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை அரசாங்கம் வழங்க தவறிவிட்டது.

    உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பட்டியலை அரசு வெளியிட வேண்டும். இந்துக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர், அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.

    நான் முன்பே சொன்னதுபோல் ராணுவத்தை அங்கு வரவழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டநெரிசல் ஏற்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×