என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![வேப்பங்குச்சி விற்று 5 நாளில் ரூ.40 ஆயிரம் சம்பாதித்தவர் வேப்பங்குச்சி விற்று 5 நாளில் ரூ.40 ஆயிரம் சம்பாதித்தவர்](https://media.maalaimalar.com/h-upload/2025/01/31/8771789-maha.webp)
X
வேப்பங்குச்சி விற்று 5 நாளில் ரூ.40 ஆயிரம் சம்பாதித்தவர்
By
மாலை மலர்31 Jan 2025 9:07 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கையில் ஏராளமான குச்சிகளை ஏந்தியபடி ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
- வீடியோ 5 லட்சத்து 33 ஆயிரம் பேரின் விருப்பங்களைப் பெற்று, மேலும் பல லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது.
மகா கும்பமேளாவில் கூடிய கூட்டத்தினரிடையே பல்துலக்க வேப்பங்குச்சி விற்கும் வாலிபரின் வீடியோ வைரலாகி உள்ளது. கூட்டத்தின் நடுவே கையில் ஏராளமான குச்சிகளை ஏந்தியபடி ஒரு வாலிபர் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவரிடம், ஒருவர் வீடியோ எடுத்தபடி பேச்சுக் கொடுக்கிறார்.
" பல்துலக்கும் வேப்பங்குச்சிகளை கும்பமேளா கூட்டத்தில் விற்பனை செய்கிறேன். 5 நாளில் ரூ.40 ஆயிரம் சம்பாதித்து உள்ளேன். எனக்கு இந்த யோசனையை எனது காதலி சொன்னாள். முதலீடே தேவையில்லாத தொழில் என்று அவள் கூறினாள். அவளால் நான் இவ்வளவு சம்பாதித்து இருக்கிறேன்" என்று புன்னகை பூக்க கூறினார் அவர். இந்த வீடியோ 5 லட்சத்து 33 ஆயிரம் பேரின் விருப்பங்களைப் பெற்று, மேலும் பல லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
X