என் மலர்
இந்தியா
X
ரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' - மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம்
Byமாலை மலர்10 Oct 2024 2:05 PM IST
- ரத்தன் டாடா பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா ஆகும்.
- மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ள ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தொழிலதிபரும், கட்டுரையாளருமான சுஹேல் சேத், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்ர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது 'பாரத ரத்னா' என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X