search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு
    X

    உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு

    • மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
    • தற்போது நடைபெ்றற சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் சமாஜ்வாடிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

    உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, நகர பொறுப்புகள் உள்பட அனைத்து காங்கிரஸ் கட்சியின் கமிட்டிகளும் கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.

    உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. தற்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட்டது. இந்த தேர்தல்களில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கட்சியை மறுகட்டமைப்பு செய்ய இந்த நடவடிக்கை மேற்கொளண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் அஜய் ராய் காங்கிரஸ் கட்சி தலைவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×