என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![சம்பளம் கிடுகிடு உயர்வு - எம்.எல்.ஏ.-க்களுக்கு குட்நியூஸ் சொன்ன மம்தா பானர்ஜி சம்பளம் கிடுகிடு உயர்வு - எம்.எல்.ஏ.-க்களுக்கு குட்நியூஸ் சொன்ன மம்தா பானர்ஜி](https://media.maalaimalar.com/h-upload/2023/09/07/1946193-mamata-banerjee.webp)
X
சம்பளம் கிடுகிடு உயர்வு - எம்.எல்.ஏ.-க்களுக்கு குட்நியூஸ் சொன்ன மம்தா பானர்ஜி
By
மாலை மலர்7 Sept 2023 7:54 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் உயர்த்தப்பட்டது.
- மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்காள எம்.எல்.ஏ.-க்கள் சம்பளம் குறைவாக இருந்தது.
மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதன்படி மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
எனினும், முதலமைச்சரின் வருவாயில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மம்தா பானர்ஜி மேலும் தெரிவித்து இருந்தார்.
"மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகத் தான் அவர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 40 ஆயிரம் என்று உயர்த்தப்படுகிறது" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Next Story
×
X