search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீரியஸா கேட்கிறேன்.. இதுதான் ஆட்சியா? - தொடரும் ரெயில் விபத்துகளுக்கு மம்தா கண்டனம்
    X

    சீரியஸா கேட்கிறேன்.. இதுதான் ஆட்சியா? - தொடரும் ரெயில் விபத்துகளுக்கு மம்தா கண்டனம்

    • ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை ஜார்கண்டில் அருகே தடம் புரண்டது.
    • வாராவாரம் நடக்கும் இந்த விபத்துகளால் மரணங்கள், படுகாயங்கள் ஏற்படுகின்றன

    மேற்கு வங்க தலைநகர் கால்கத்தாவிலுள்ள ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது. இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்காண்டில் உள்ள ராஜ்கர்சவான் ரெயில் நிலையத்திற்கு அருகில் சரக்கு ரெயிலுடன் மோதி இந்த விபத்து நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தில் 20 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் அலட்சியப் போக்குக்கு ஒரு முடிவு என்பதே இல்லையா என்று சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்நிலையில் விபத்து உட்பட சமீபத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் ரெயில் விபத்துகளுக்கு மத்திய பாஜக அரசைக் குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

    விபத்துகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதுதான் ஆட்சியா?. ரெயில் விபத்துகள் நடப்பது என்பது வழக்கமாகி விட்டது. வாராவாரம் நடக்கும் இந்த விபத்துகளால் மரணங்கள், படுகாயங்கள் நடக்கின்றன. நான் சீரியாகக் கேட்கிறேன்?, இது உண்மையில் ஆட்சிதானா?, இன்னும் எத்தனை காலம் இதையெல்லாம் பொறுத்துக்கொள்வது என்று கேள்விக் கணைகளை விளாசியுள்ளார்.

    Next Story
    ×