என் மலர்
இந்தியா
லாரன்ஸ் பிஷ்னோய் கிட்ட பேசுறியா.. சல்மான் கான் சூட்டிங் ஸ்பாட்டில் மிரட்டல் விடுத்த நபர் கைது
- மும்பையில் சல்மான் கான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
- போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் மீது பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். கடந்த மாதம் சல்மான்கானுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவருடைய பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சல்மான் கான் படப்பிடிப்பில் சட்டவிரோதமாக நுழைந்த நபர் ஒருவர் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு கால் செய்ய வேண்டுமா? என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பையில் உள்ள சிவாஜி பார்க் பகுதியில் சல்மான் கான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்பகுதிக்குள் சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் நடமாடி கொண்டிருந்தார். இதனையடுத்து சிலர் அவரிடம் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு கால் செய்ய வேண்டுமா? என்று பதில் அளித்துள்ளார்.
உடனடியாக இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நபரை சிவாஜி பார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.