என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![ஜே.சி.பி. மூலம் யானையுடன் மோதியவர்- வீடியோ ஜே.சி.பி. மூலம் யானையுடன் மோதியவர்- வீடியோ](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9067717-westbengal.webp)
ஜே.சி.பி. மூலம் யானையுடன் மோதியவர்- வீடியோ
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- யானை ஆத்திரம் அடைந்து ஜே.சி.பி. எந்திரத்துடன் மோதுகிறது.
- யானை மிரண்டு ஓடியபோதும் அதை துரத்துகிறார்.
யானையும்- ஜே.சி.பி. எந்திரமும் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.
மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டம் டாம்டிம் பகுதியில் ஒரு காட்டு யானை உணவு தேடி ஊர்ப்புறத்துக்கு வந்துவிட்டது. இதையடுத்து கிராம மக்கள் யானையை துரத்த ஆரம்பித்தனர். கம்பு- குச்சிகளுடன் கூச்சல் போட்டால் மட்டும் யானையை விரட்ட முடியாது என நினைத்த ஒருவர், ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் யானையை விரட்ட முயற்சிக்கிறார்.
அப்போது யானை ஆத்திரம் அடைந்து ஜே.சி.பி. எந்திரத்துடன் மோதுகிறது. தன் பலத்தால் ஜே.சி.பி.யை அந்தரத்திற்கு உயர்த்துகிறது. இருந்த போதிலும் ஜே.சி.பி. டிரைவர், எந்திரத்தின் பின்பக்க தோண்டும் பகுதியை தரையில் பதித்து ஜே.சி.பி.யை கவிழ்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டு யானையுடன் சாதுரியமாக மோதுகிறார். யானை மிரண்டு ஓடியபோதும் அதை துரத்துகிறார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கடும் விவாதத்தை தூண்டியது. 'வனவிலங்கை இப்படி துன்புறுத்துவதா?' என்று பலரும் கண்டன பதிவுகளை வெளியிட்டனர். போலீசார் விசாரணை நடத்தி ஜே.சி.பி. டிரைவரை கைது செய்து உள்ளனர்.
In India they fight Elephants with JCB Diggers pic.twitter.com/G7HxcZCJJo
— Concerned Citizen (@BGatesIsaPyscho) February 5, 2025