என் மலர்
இந்தியா
லிவிங் டுகெதரில் இருந்த பெண்ணை கொன்று Fridge-ல் வைத்த நபர்... காட்டிக்கொடுத்த பவர்கட்
- பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
- வீட்டின் ஒரு அறையில் குளிர்சாதன பெட்டி மற்றும் இன்னும் சில பொருட்களை வைத்துள்ளார்.
லிவிங் டுகெதரில் இருந்த பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நேற்று ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர், வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது சேலை அணிந்திருந்த பெண்ணின் அழுகிய உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பெண் நகைகள் அணிந்தும், கைகள், கழுத்து கயிற்றால் கட்டப்பட்டும், நெரிக்கப்பட்டும் காணப்பட்டது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது, தீரேந்திர ஸ்ரீவஸ்தவா என்பவருக்கு சொந்தமான வீட்டில் உஜ்ஜைனியைச் சேர்ந்த படிதார் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் வாடகைக்கு உள்ளார். அப்போது அவருக்கு பிங்கி பிரஜாபதி என்ற 30 வயதுடைய பெண்ணுடன் திருமணத்திற்கு முந்தைய உறவில் இருந்துள்ளார். இவர்களின் இந்த உறவானது 5 ஆண்டுகளாக தொடர்ந்துள்ளது.
இதனிடையே, பிங்கி பிரஜாபதி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த படிதார் அவரை கொன்றுள்ளர். இதனால் செய்வதறியாது தவித்த படிதார், அப்பெண்ணின் உடலை குளிர்சாதன பெட்டியில் அடைத்து வைத்துள்ளார். இந்த கொலையானது கடந்த ஜூன் மாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
குடியிருந்த வீட்டை காலி செய்த படிதார், அதே வீட்டின் ஒரு அறையில் குளிர்சாதன பெட்டி மற்றும் இன்னும் சில பொருட்களை வைத்துள்ளார். அடிக்கடி வந்து வீட்டின் அறைக்கு வந்து சென்றுள்ளார். இதையடுத்து கடந்த புதன்கிழமை அன்று அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்தே, குளிர்சாதன பெட்டியில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.