என் மலர்
இந்தியா
VIDEO: தெருநாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்கள்
- காரின் பேனட் மீது நாயை அமர வைத்து அதன் முன்பு கேக் வைத்து வெட்டுகின்றனர்.
- வீடியோ முடிவில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் தங்கள் பிறந்தநாளை வித்தியாசமாகவும், விமர்சையாகவும் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அன்ஷூ சவுகான் என்ற பயனர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், இளைஞர்கள் தெருநாய்க்கு பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய காட்சிகள் உள்ளது. அதில், இளைஞர்கள் ஒரு காரில் தெருநாய் ஒன்றுக்கு மலர் மாலைகள் அணிவித்து கொண்டு வருகின்றனர். பின்னர் காரின் பேனட் மீது நாயை அமர வைத்து அதன் முன்பு கேக் வைத்து வெட்டுகின்றனர். அந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் ஆரவாரம் செய்து வந்த வாலிபர்களும் அவர்களுடன் சேர்ந்து தெருநாயின் பிறந்தநாளை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடுகின்றனர்.
மேலும் தெருநாய் மீது மலர்களையும் தூவுகின்றனர். வீடியோ முடிவில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் மற்றும் கருத்துக்களை பெற்றது. ஒரு பயனர், இது பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால் கேக்குகள் மற்றும் இனிப்புகள் நாய்களுக்கு நல்லதல்ல. தயவு செய்து கவனமாக இருங்கள் என பதிவிட்டிருந்தார்.