என் மலர்
இந்தியா
திருப்பதி கோவில் தேவஸ்தான அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
- மங்கலப் பொருட்களுடன் அறநிலைத்துறை இணை ஆணையரை அனுமதிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
- மாரியப்பனுக்கு பாஸ் இருந்தும் எப்படி அனுமதிக்காமல் இருக்கலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருப்பதி கோவில் ஆனிவார ஆஸ்தானத்திற்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து மங்கலப் பொருட்கள் சென்றன. மங்கலப் பொருட்களுடன் கோவிலுக்குள் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
மங்கலப் பொருட்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் கோவிலுக்குள் சென்ற பிறகு, தமிழக அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழக அறநிலைத்துறை இணை ஆணையர் மாரியப்பனுடன் கோவிலுக்குள் செல்ல முயன்றார்.
அப்போது அதிகாரிகள் தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அனுமதிக்கப்பட்டு விட்டனர். இதனால் மாரியப்பனை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
அப்போது மாரியப்பனுக்கு பாஸ் இருப்பதாகவும், அவரை அனுமதிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தினார். ஆனால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் சேகர்பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், மாரியப்பனை அனுமதிக்காமல் தான் உள்ளே செல்ல மாட்டேன் எனக் கூறினா. சேகர்பாபுவின் வலியுறுத்தலையடுத்து அதிகாரி மாரியப்பன் கோவலிக்குள் அனுமதிக்கப்பட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரப்பரபு ஏற்பட்டது.