search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மோடி பர்த்டே முகாம்.. ரத்தம் தருவதுபோல் போஸ் கொடுத்துவிட்டு நழுவிய பாஜக மேயர் - வீடியோ வைரல்
    X

    மோடி பர்த்டே முகாம்.. ரத்தம் தருவதுபோல் போஸ் கொடுத்துவிட்டு நழுவிய பாஜக மேயர் - வீடியோ வைரல்

    • கடந்த செப்டம்பர் 17 பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்
    • டியோ லீக் ஆகியுள்ள நிலையில் இணையத்தில் பாஜக மேயர் கேலி செய்யப்பட்டு வருகிறார்

    கடந்த செப்டம்பர் 17 பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.

    ரத்த தான நிகழ்வில் பங்கேற்ற பாஜக மேயர் வினோத் அகர்வால் ரத்த தானம் கொடுப்பதுபோல் படுக்கையில் படுத்து கேமராவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ரத்தம் கொடுக்காமலேயே அங்கிருந்து வெளியேறிய வீடியோ லீக் ஆகியுள்ள நிலையில் இணையாயத்தில் பாஜக மேயர் கேலி செய்யப்பட்டு வருகிறார்.

    கேமராவுக்கு போஸ் கொடுத்த பின்னர் அதற்கு மேல் எதுவும் செய்ய வேண்டாம் என்று டாக்ட்ரிடம் சைகை காட்டிவிட்டு சிரித்தபடி படுக்கையில் இருந்து எழுந்து பாஜக மேயர் வெளியேறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

    Next Story
    ×