search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகா கும்பமேளாவில் பாசி மாலை விற்கும் மோனாலிசா..   இணையத்தில் சென்சேஷனான 16 வயது பெண்
    X

    மகா கும்பமேளாவில் பாசி மாலை விற்கும் மோனாலிசா.. இணையத்தில் சென்சேஷனான 16 வயது பெண்

    • இதுவரை சுமார் 8.81 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
    • மக்கள் அவருடன் செல்பி எடுக்க அலைமோதுகின்றனர்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும்.

    இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இதுவரை சுமார் 8.81 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 54.96 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் வித்தியாசமான துறவிகள் கவனம் பெற்று வருகின்றனர். அதே வெளியில் பாசி மணி மாலைகள் விற்கும் மோனாலிசா போஸ்லே எனும் 16 வயதான பெண் இந்திய அளவில் சமூக ஊடகங்களில் டிரண்ட் ஆகி வருகிறார்.

    திரை நடிகைகளின் போலித்தனங்கள் இல்லமால் எதார்த்தமான அழகுடன் அவர் இருப்பது பலரையும் கவர்ந்துள்ளது. மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் கும்பமேளாவில் பாசி மாலைகள் விற்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனால் பல ஊடகங்கள் அவரிடம் கும்பமேளாவில் வைத்து பேட்டி எடுக்கவும், மக்கள் அவருடன் செல்பி எடுக்கவும் அலைமோதுகின்றனர். பல சமூக ஊடக பயனர்கள் லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்துடன் இவருக்கு இருக்கும் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றனர்.

    Next Story
    ×