search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மராட்டியத்தில் மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?- தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி கேள்வி
    X

    மராட்டியத்தில் மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?- தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி கேள்வி

    • 2019 மாநில தேர்தல்- 2024 மக்களவை தேர்தல் இடையிலான 5 வருடத்தில் 32 லட்சம் வாக்காளர்கள்தான் சேர்ப்பு.
    • ஆனால் மக்களவை- சட்டமன்ற தேர்தலுக்கு இடையிலான காலக்கட்டத்தில் 39 வாக்காளர்கள் சேர்ப்பு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வருடம் இறுதியில் நடைபெற்ற மாநில தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கூட்டணி படுதோல்வியை அடைந்தது.

    மாநில தேர்தலுடன் ஒரு எம்.பி. தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. எம்.பி. தொகுதியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. ஆனால் அதில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ. (6) இடங்களையும் பாஜக கூட்டணி கைப்பற்றியது. இது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. அத்துடன், பாராளுமன்ற தேர்தலுக்கும், மராட்டிய மாநில தேர்தலுக்கும் இடைபட்ட 5 மாதத்தில் 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருடன் ராகுல் காந்தி இன்று பத்திரிகையாளரக்ளை சந்தித்தார்.

    அப்போது ராகுல் காந்தி 2019 மகாராஷ்டிரா மாநில தேர்தல்- 2024 மக்களவை தேர்தல் ஆகியவற்றிற்கு இடையிலான ஐந்தாண்டு காலத்தில் 32 லட்சம் வாக்குகள் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும், மக்களவை தேர்தல் 2024- மகாராஷ்டிரா மாநில தேர்தல் 2024 ஆகியவற்றிற்கு இடையிலான 5 மாதகால இடைவெளிக்குள் 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 39 லட்சம் வாக்காளர்கள் யார்? என்பதுதான் கேள்வி.

    இந்த 39 லட்சம் வாக்காளர்கள் என்பது ஏறத்தாழ இமாச்சல பிரதேச மக்கள் தொகையாகும். 2-வது கேள்வி, மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 9.54 கோடி. ஆனால், அதைவிட 9.7 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்த வாக்காளர்களை விட, அதிகமான வாக்காளர்கள் இருப்பது ஏன்?.

    இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் 30 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.

    ஆனால் சட்டசபை தேர்தலில் 288 இடங்களில் வெறும் 49 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    Next Story
    ×