என் மலர்
இந்தியா
பிரசவித்த சில மணி நேரங்களில்.. லிப்ட் அறுந்து விழுந்து உயிரிழந்த தாய்
- லிப்டில் ஸ்ட்ரெச்சரை தள்ளியபோது பெல்ட் அறுந்து லிப்ட் விழுந்துள்ளது.
- ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் சாஸ்திரி நகரில் உள்ள கேபிடல் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த சில மணி நேரங்களில் லிப்ட் அறுந்து விழுந்து தாய் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கரிஷ்மா (30) என்ற பெண் சிசேரியன் பிரசவத்திற்காக காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த பிறகு அவர் பொது அறைக்கு மாற்ற ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, லிப்டில் ஸ்ட்ரெச்சரை தள்ளியபோது பெல்ட் அறுந்து லிப்ட் விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர். சம்பவ இடத்தில் இருந்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் தப்பினர்.
பிறந்த பெண் குழந்தை வேறு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மீரட்டின் லோஹியா நகர் காவல் நிலையத்தில் கேபிடல் மருத்துவமனையின் மருத்துவர், மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீரட் தலைமை மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து 15 நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து அருகிலுள்ள மற்றொரு மருத்துவ மையத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனைக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை மற்றும் சிஎம்ஓ குழுவை அமைத்துள்ளனர்.