என் மலர்
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதான திட்டத்திற்கு 11 கோடி ரூபாய் வழங்கிய மும்பை பக்தர்

- தினந்தோறும் சுமார் 14 டன் அரிசியில் சாதம் தயாரிக்கப்படுகிறது.
- அத்துடன் 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதான திட்டத்திற்கு மும்பையை சேர்ந்த பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு 11 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
பிரசித் உனோ பேமிலி அறக்கட்டளையில் இருந்து துஷ்கர் குமார் என்பவர் திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் அந்த பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு தினந்தோறும் இலவச உணவு வழங்க அப்போதைய முதல்வர் என்.டி. ராமவா் வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் உதவி திட்டத்தை (Venkateswara Nithya Annadanam Endowment Scheme) 1985-ம் ஆண்டு தொடங்கினார்.
பின்னர் வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் உதவி திட்டம் 1994-ம் ஆணடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா நித்ய அன்னதானம் அறக்கட்டளை என மாறியது. பின்னர் 2014-ம் ஆண்டு ஸ்ரீ வெங்கடேஷ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளையாக மாறியது.
உலகில் உள்ள பக்தர்களால் வழங்கப்படும் நன்கொடைகள் நிதியாக சேர்க்கப்படுகிறது. இந்த நிதிகள் தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பயன்படுத்தப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவிலில் இயங்கி வரும் மிகப்பெரிய சமையல் கூடத்தில் தினந்தோறும் சுமார் 14 டன் அரிசியில் சாதம் தயாரிக்கப்படுகிறது. அத்துடன் 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று வேலை உணவாக வழக்கப்படுகிறது.