என் மலர்
இந்தியா

X
ஏக்நாத் ஷிண்டே கார் கண்டிப்பாக வெடிக்கும்.. தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு
By
மாலை மலர்20 Feb 2025 3:11 PM IST

- மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு
- மிரட்டல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்னேத் ஷிண்டே காருக்கு வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்வேன் என மும்பை காவல் நிலையங்களுக்கு மர்ம நபர் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொடர்ச்சியாக காவல் நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
இன்று காலை முதல் கொரிகான், ஜெ.ஜெ. மார்க் காவல் நிலையங்கள் மற்றும் மந்த்ராலயா காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவைகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்வதாக மிரட்டியுள்ளார்.
Next Story
×
X