என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள முஸ்தபாபாத்.. சிவ்புரி என பெயர் மாற்றப்படும் - பாஜக எம்எல்ஏ டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள முஸ்தபாபாத்.. சிவ்புரி என பெயர் மாற்றப்படும் - பாஜக எம்எல்ஏ](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9110146-untitleddesign2.webp)
டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள முஸ்தபாபாத்.. 'சிவ்புரி' என பெயர் மாற்றப்படும் - பாஜக எம்எல்ஏ
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முஸ்லிம்கள் 60 சதவீதம் பேரும், இந்துக்கள் 40 சதவீதம் பேரும் இருப்பதைக் கண்டேன்
- எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அதீல் அகமது கானை 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குக் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.
இறுதிகட்ட முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் முஸ்தபாபாத் தொகுதியில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று [ஞாயிற்றுக்கிழமை] வெளியிட்டுள்ளார். அதாவது முஸ்தபாபாத் என்ற பெயர் விரைவில் சிவ்புரி அல்லது சிவ் விஹார் என மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இங்கு முஸ்லிம்கள் 45 சதவீதம் பேர் உள்ளனர்.
ஆனால் நான் எங்கு பயணம் செய்தாலும், முஸ்லிம்கள் 60 சதவீதம் பேரும், இந்துக்கள் 40 சதவீதம் பேரும் இருப்பதைக் கண்டேன். நாங்கள் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, முஸ்தபாபாத் என்ற பகுதியை சிவ் விஹார் அல்லது சிவ்புரி என்று மாற்றுவோம்' என்று தெரிவித்தார்.
முன்பு காரவால் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மோகன் சிங் இந்த முறை முஸ்தபாபாத்தில் போட்டியிட்டு எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அதீல் அகமது கானை 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றது கவனத்தை ஈர்த்து வருகிறது.