என் மலர்
இந்தியா
15 வருடம் எதிர்க்கட்சிதான்: கார்கேவுக்கு அமித் ஷா பதில்
- மல்லிகார்ஜூன கார்கே என்னுடைய ராஜினாமாவை கேட்கிறார்.
- என்னுடைய ராஜினாமா கார்கேவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால் என்னால் ராஜினாமா கடிதம் கொடுக்க முடியும்.
அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே "பிரதமர் மோடிக்கு அம்பேத்கர் மீது மரியாதை இருந்தால், அவரை அவமதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று இரவுக்குள் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். அமைச்சரவையில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை" தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தன்னை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறிய மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமித் ஷா பதில் கொடுத்துள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமித் ஷா அளித்த பதிலில் "மல்லிகார்ஜூன கார்கே என்னுடைய ராஜினாமாவை கேட்கிறார். என்னுடைய ராஜினாமா கார்கேவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால் என்னால் ராஜினாமா கடிதம் கொடுக்க முடியும்.
ஆனால், இந்த என்னுடைய ராஜினாமா அவருடைய பிரச்சனையை தீர்க்காது. அவர் இன்னும் 15 வருடம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். என்னுடைய ராஜினாமாவால் மாற்றம் அடையாது. எனது பேச்சு திரித்து கூறுப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.