என் மலர்
இந்தியா
X
பட்ஜெட் 2024 - மருத்துவ கல்லூரிகள் அதிகரிக்கப்படும்
Byமாலை மலர்1 Feb 2024 11:48 AM IST (Updated: 1 Feb 2024 4:54 PM IST)
- புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிதியமைச்சர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
- முழு பட்ஜெட் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் தாக்கல் செய்யப்படும்
வரும் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ துறை குறித்து நிதியமைச்சரின் உரையின் சிறப்பம்சங்கள்:
எங்கள் அரசு பல மருத்துவ கல்லூரிகளை திறக்க உள்ளது. தற்போது உள்ள கல்லூரிகளும் மேம்படுத்தப்படும். இதற்கென ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதன் ஆலோசனைகள் பெறப்படும். இதன் மூலம் எதிர்கால இந்தியாவிற்கு தேவைப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கை உயரும்.
Next Story
×
X