என் மலர்
இந்தியா

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது

- மும்பையில் இருந்து 322 பேருடன் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் புறப்பட்டுச் சென்றது.
- நடுவானில் சென்றபோது வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கடிதம் கண்டெடுக்கப்பட்டதால் மும்பை திருப்பி விடப்பட்டது.
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இன்று காலை 19 விமான ஊழியர்கள் உள்பட 322 பேருடன் போயிங் 777-300 ER விமானம் மும்பை சத்ரபதி சிவாஜ் மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் கழிப்பறையில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு துண்டு நோட்டீஸ் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக விமானிக்கு தகவல் தெரிவிக்க, அவர் உடனே விமானத்தில் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பினார்.
விமானம் மும்பைக்கு திரும்பிய நிலையில், அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார். இதுவரை சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. விசாரணை நடத்து வருகிறோம் என அதிரிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது, பாதுகாப்பு மிரட்டல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானம் மும்பைக்கு மீண்டும் திருப்பப்பட்டது. விமானத்தில் உள்ள அனைவரிடன் பாதுகாப்பு நலனிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பு அமைப்புகளில் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு ஏர்இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விமானம் நாளை காலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் ஓட்டலில் தங்கவும், உணவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.