search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    என்.டி.ஏ.-வில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு இல்லை: நிதிஷ் குமார்
    X

    என்.டி.ஏ.-வில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பு இல்லை: நிதிஷ் குமார்

    • முதன்முறையாக 2005-ல் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றபோது, நான் முதல்வராக வேண்டும் என வாஜ்பாய் விரும்பினார்.
    • அப்படி இருக்கும்போது நான் ஏன் பாஜகவுடன் இருக்கக் கூடாது.

    பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற வாய்ப்புள்ளது. அவருக்காக தனது கதவை திறந்தே வைத்திருப்பேன் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாரத் யாதவ் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகும் கருத்தை நிதிஷ் குமார் நிராகரித்துள்ளார்.

    இது தொடர்பாக நிதிஷ் குமார் கூறியாதாவது:-

    மரியாதைக்குரிய வாஜ்பாய் என்னை மத்திய மந்திரியாக்கினார். அவர் என் மீது அதிக பாசம் காட்டினார். என்னுடைய பரிந்துரைரைக்கு அவரிடம் இருந்து சம்மதம் பெற ஒருபோதும் கடினமான சூழ்நிலையை சந்தித்தது இல்லை.

    முதன்றையாக 2005-ல் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றபோது, நான் முதல்வராக வேண்டும் என வாஜ்பாய் விரும்பினார்.

    அப்படி இருக்கும்போது நான் ஏன் பாஜகவுடன் இருக்கக் கூடாது. இரண்டு முறை என் கட்சியில் உள்ளவர்கள் தவறு செய்து விட்டார்கள். அவர்கள் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க வற்புறுத்தினர். இரண்டு முறையும் நான் அதை சரி செய்தேன்.

    இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×