என் மலர்
இந்தியா
சபாநாயகர் அப்பாவு பேசியதில் அவதூறு ஒன்றும் இல்லை- சுப்ரீம் கோர்ட்
- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு மனு தாக்கல் செய்திருந்தார்.
- சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியதாக சபாநாயகர் அப்பாவு மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
சபாநாயகர் பேச்சு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "புகார்தாரர் தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை" என தெரிவித்தார்.
பின்னர், சபாநாயகர் அப்பாவு எதிரான அவதூறு வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு பேசியதில் அவதூறு ஒன்றும் இல்லை என கூறி அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறியதை அடுத்து அதிமுக வழக்கை வாபஸ் பெற்றது. வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.