என் மலர்
இந்தியா
மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான EVM வாக்குகள் மற்றும் VVPAT ரசீது எண்ணிக்கை சரியாக உள்ளது: தேர்தல் ஆணையம்
- EVM-ல் பதிவான வாக்குகளையும், VVPAT ரசீதுகளையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
- இந்த முரண்பாடும் அதாவது வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு இல்லை என தெரிவிப்பு.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றதாக மகா விகாஸ் அகாடி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர். மகாயுதி கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்றது. மகா விகாஸ் அகாடி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கடந்த 23-ந்தேதி தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும ஐந்து வாக்கு மையங்களின் VVPAT ரசீதுகளை எண்ணியுள்ளது.
VVPAT ரசீதுகளின் மொத்த எண்ணிக்கையும், EVM-ல் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இரு வாக்குகள் சரியாக இருந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியவர்களுடன் சரிபார்த்ததற்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது.
இந்த எண்ணிக்கை கடும் பாதுகாப்பு நடவடிக்கையுடன் தனி அறைகளில், சிசிடிவி மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.