என் மலர்
இந்தியா

நாட்டில் உள்ள எந்த நதியும் சுத்தமாக இல்லை- ராஜ்தாக்கரே

- உயிரிழந்த உடல்களை கங்கை நதியில் வீசுவதையும் பார்த்து உள்ளேன்.
- கட்டுக்கதையில் இருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது.
மும்பை:
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் 19-வது ஆண்டு நிறுவன தினம் தாதரில் கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கலந்துகொண்டு பேசியதாவது:-
எனது கட்சி பிரமுகர் பாலாநந்த்காவ்கர் மகா கும்பமேளா சென்றிருந்தார். அங்கிருந்து புனித கங்கை நீரை கொண்டு வந்தார். ஆனால் அதனை நான் குடிக்க மறுத்து விட்டேன் ஏனெனில் கங்கை நதியின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை பார்த்து உள்ளேன்.
சிலர் ஆற்றில் தங்கள் உடல்களை சொறிந்து கழுவுவதை கண்டு உள்ளேன். மேலும் உயிரிழந்த உடல்களை கங்கை நதியில் வீசுவதையும் பார்த்து உள்ளேன். இந்தியாவில் உள்ள எந்த நதியும் சுத்தமாக இல்லை. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது கங்கை நதி விரைவில் சுத்தம் செய்யப்படும் என அவர் பேசியதை நான் கேள்விப்பட்டு உள்ளேன். இப்போது இந்த கட்டுக்கதையில் இருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அவர் பேசினார்.