என் மலர்
இந்தியா
அதிஷியை தற்காலிக முதல்வர் என கெஜ்ரிவால் அழைப்பது வேதனையளிக்கிறது: டெல்லி துணைநிலை ஆளுநர்
- அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பது வேதனையளிக்கிறது.
- அம்பேத்கரின் அரசியலமைப்பில் இதுபோன்ற பதவி இல்லை.
டெல்லி மாநில முதல்வராக அதிஷி இருந்து வருகிறார். டெல்லி மாநில மதுபானக் கொள்ளை தொடர்பான மோசடி வழக்கில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த உடன மக்களை தன்னை நிரபராதி என அழைக்கும் வரை முதல்வர் பதவியை பெற மாட்டேன் என தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் அதிஷி டெல்லி மாநில முதல்வராக பதவி ஏற்றார். இந்த நிலையில்தான் அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த கெஜ்ரிவால் அழைத்து வருவது வேதனையளிக்கிறது என டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் சக்சேனா கூறுகையில் "அதிஷியை தற்காலிக முதல்வர் என அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பது வேதனையளிக்கிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பில் இதுபோன்ற பதவி இல்லை. ஜனாதிபதி அவரை முதல்வராக நியமித்து, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது இது இழிவுப்படுத்துவது போன்றதாகும்.
இவ்வாறு சக்சேனா தெரிவித்துள்ளார்.